சங்கீதம் புத்தகம் - சங்கீதங்கள் 1 முதல் 30 வரை
3 கேள்விகள் இரட்சிப்பு பத்திரிக்கையிலிருந்தும் (பக்கம் 2,4,5,6,19) 12 கேள்விகள் வேதாகமத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன
வேதவசன இருப்பிடம் - இரட்சிப்பு பத்தரிக்கை பக்கம் எண் அவசியம் எழுதவேண்டும். பதில்கள் அனுப்ப கடைசிநாள்: 25-04-2026
படைப்பாசிரியர்: அருட்திரு.எஸ்ஜேடி. தர்மராஜா
1. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறிக்கும் வகையில் சங்கீதக்காரர்
பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் எவை?
2. சங்கீதம்-16:11ல் காணப்படும் ‘நித்தியபேரின்பம்’ என்ற சொல்லுக்கு, மற்ற 3 இணைத்
திருமறைகள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் எவை?
3. சங்கீதம்-16:10ல் காணப்படும் ‘பரிசுத்தவான்’ என்ற வார்த்தை, இயேசுவைக் குறித்து எழுதப்
பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறவர்கள் யார்?
4. ‘தேவன் இல்லை’ என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்பவன் யார்?
5. காற்று பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறவர்கள் யார்?
6. குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருப்பது எது?
7. ‘கர்த்தர் நீதிமான்களின் வழியை அழித்திருக்கிறார்’ - சரியா தவறா?
8. ‘ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை இகழுகிறவர்’ - சரியா தவறா?
9. ‘கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளை பிளக்கும்’ - சரியா தவறா?
10. ‘இது’ கர்த்தருடையது; தேவரீரின் ஆசீர்வாதம் உம் ஜனத்தின்மேல் இருப்பதாக:
அ) இரட்சிப்பு ஆ) வல்லமை இ) மகிமை ஈ) கிருபை
11. துன்மார்க்கரும் தேவனை மறக்கிற ஜாதிகளும் ‘இங்கு’ தள்ளப்படுவார்கள்:
அ) படுகுழியில் ஆ) சமுத்திரத்தில் இ) பாதாளத்தில் ஈ) நரகத்தில்
12. அந்நிய தேவனை நாடி பின்பற்றுகிறவர்களுக்கு ‘இவைகள்’ பெருகும்:
அ) துன்பங்கள் ஆ) சோதனைகள் இ) பாவங்கள் ஈ) வேதனைகள்
13. சொக்கத் தங்கத்திலும் உயர்ந்தவை! கூட்டுத்; தேனிலும் இனியவை!
நெகிழ்;ச்சி, இவை இதய மகிழ்ச்சி! உண்மை, இவை எல்லாம் செம்மை!
இவை எவை? இவை எவை?
14. கண்ணிகள் கொட்டிடும் மழையில்!
கந்தகம் கொதித்திடும் கோப்பையில்!
கனல்காற்று அனல்வீசும் கோடையில்! யாருக்கு, இது யாருக்கு?
15. தேடுவேன் நான் தேடுவேன், தேவனிடம் தேடுவேன்!
தேடச்சொன்னதால் தேடுவேன், தேவனுடையதை தேடுவேன்!
மறைக்கவேண்டாம் தேடுவேன், மனதாரத் தேடுவேன்! தேடுவது எதை?
பதில் அனுப்பவேண்டிய முகவரி: திருமதி.ஜெயசீலி தர்மராஜா, எஃப்-1, முதல் மாடி, பாரதி பிளாட்ஸ், எண்: 4/2-A பாரதி தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை-93. வாட்ஸ்-அப்: 9789914463